April 2, 2020
தண்டோரா குழு
கோவை குனியமுத்தூர் குளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக மீட்கப்பட்டார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து பகுதிகளும் வெரிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் குனியமுத்தூர் குளத்தின் அருகே அப்பகுதியை சேர்ந்த சிலர் சென்றாத தெரிகிறது. அப்போது குளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக மிதத்துள்ளார். இதை பார்த்த மக்கள் குனியமுத்தூர் போலீஸார் தகவல் அளித்தனர்.
குளத்தின் அருகில் துணிகளை துவைத்து உலரவைத்ததுபோல் உள்ளது.அவர் குளிப்பதர்க்காக குளத்தில் இறங்கும்பொழுது. தவறி விழுந்தாரா என்பது தெரியவில்லை சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபர் யார் , தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.