April 1, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்,
தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 190 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்.
தமிழகத்தில் 77,330 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 17 பரிசோதனை கூடங்கள் செயல்படுகின்றன.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வருமாறு நேற்று தமிழகஅரசு அழைப்பு விடுத்திருந்தது. அழைப்பையேற்று 19 மாவட்டங்களை சேர்ந்த 1103பேரும் ஒரே நாளில் தாமாக முன்வந்து அரசை தொடர்புகொண்டு தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளார்கள். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வயதானவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வராமல் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.