• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆன் லைன் வாயிலாக பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

March 31, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் பாதிப்பால் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில், மாணவர்கள் தங்கள் கற்றலை தொடரும் வகையில், கோவையில் ஆன் லைன் வாயிலாக ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கியுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 14 வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் கல்வி கற்கும் முறையை பள்ளிகள் பின்பற்ற துவங்கியுள்ளன.அந்த வகையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கோயமுத்தூர் பப்ளிக் பள்ளியில் ஆன் லைன் வாயிலாக மாணவ,மாணவிகளுக்கு கல்வி அளிக்கும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளனர். வீடுகளில் ஆசிரியர்கள் லேப்டாப் வாயிலாக வீடியோ கான்பரன்ஸ் போன்று மாணவர்களின் கல்வி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து கல்வி பயிற்றுவித்து வருகின்றனர்.

இது குறித்து ஆன்லைன் கல்வி கற்று கொடுத்து வரும் ஆசிரியர்கள் ஜீவானந்தம்,மயூராபிரியா ஆகியோர் கூறுகையில்,

பாரதபிரதமரின் அறிவுரைப்படி வீட்டிலிருந்தே பாதுகாப்பாக அனைவரும் பணிகளை செய்யும் வேண்டும் என்பதன் அடிப்படையில் மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்காத வகையில் இந்த ஆன்லைன் முறையை பின்பற்றுவதாகவும், இதனால் மாணவ,மாணவிகளும் வீட்டில் இருந்த படியே நேரத்தை வீணாக்கமல் பயன்பெறும் வகையில் இந்த ஆன்லைன் கல்வி முறை இருப்பதாக தெரிவித்தனர்.தற்போது பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கற்றல் திறனை தொடரும் வகையில், துவங்கப்பட்ட இந்த ஆன்லைன் கல்வி முறை கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க