March 29, 2020
தண்டோரா குழு
ஞாயிற்று கிழமை என்பதால் கோவையில் இறைச்சி மற்றும் மீன் வாங்குவதற்கு கடைகளில் அதிகாலையில் இருந்தே அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், அத்தியாவிசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல வேண்டும் என்றும்,தேவைகள் இல்லாமல் வெளியே வராமல் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும்,என அறிவுறுத்தப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் அதிகாலையே மீன் மற்றும் இறைச்சி வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர்.
அதன்படி கோவையின் முக்கிய இறைச்சி கூடமான உக்கடம் பகுதியில் மீன் மற்றும் இறைச்சிகளை வாங்குவதற்கு அதிகாலை 5 மணி முதலே மக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் கொரோணா நோய் பரவாமல் தடுக்க ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இறைச்சிகளை வாங்கி செல்ல வேண்டும் என்று வியாபாரிகளும் போலீசாரும் அறிவுறுத்தினர்.