March 28, 2020
தண்டோரா குழு
சாய்பாபா காலணி, உக்கடம் பேருந்து நிலையங்கள் காய்கறி சந்தையாக மாற்றப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவையான பால், காய்கறி, உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு அனுமதி யளிக்கப்பட்டது. கொரோனா தொற்று விரியம் மிகவும் அதிகம் என்பதால் தமிழகத்தில் கடுமையாக ஊரடங்கை பின்பற்ற தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் உழவர் சந்தைகள் காலை 4.30 மணி முதல் 9 மணி மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் குறுகிய இடங்களில் சந்தைகள் அமைக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் டவுன்ஹால் காய்கறி மார்க்கெட் மற்றும் உக்கடம் காய்காறி மார்க்கெட், உக்கடம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் பொதுமக்கள் நெருக்கத்தை தடுக்க 1 மீட்டர் இடைவெளியில் கட்டங்கள் போடப்பட்டுள்ளது. காலை முதல் உக்கடம் பேருந்து நிலையத்தில் காய்கறி வாங்க மக்கள் அதிகளவு வந்தனர்.