March 27, 2020
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து அனைத்தும் முடங்கியுள்ளது.மேலும் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி அத்தியாவசிய பொருட்களான காய்கறி மளிகை உட்பட பொருட்கள் அனைத்தும் கிடைக்கச் செய்யும் வகையில் மளிகை கடைகள் காய்கறி கடைகள் உள்ளிட்டவைகளை திறந்து வைத்து மக்களுக்கு வழங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் காய்கறிகள் மலிகைகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் தனியார் துறையில் காய்கறிகள் மிகவும் அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள உழவர் சந்தை திறக்கப்பட்டது அதேபோல் சிங்காநல்லூர் உழவர் சந்தையும் திறக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மக்கள் அதிகமாக கூட்டம் கூடி நெருங்கி நிற்க கூடாது என்று அடிப்படையில் உழவர் சந்தையில் ஆங்காங்கு தரைகளில் சுமார் ஒரு மீட்டர் அளவிற்கு கட்டம் இட்டுள்ளனர்.அதில் பொதுமக்கள் வரிசையாக நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதுதவிர தற்போது தனியார் துறைகளில் விலை உயர்வாக இருந்தது இப்பொழுது உழவர் சந்தையில் மிகவும் குறைவாக கிடைப்பது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர் இதனைத்தொடர்ந்து இச்சந்தையில் அரசின் அறிவுறுத்தலின்படி நடைபெறுகிறதா இன்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.