March 27, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 லிருந்து 35 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில் “தமிழகத்தில் புதிதாக ஆறு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது