March 25, 2020
தண்டோரா குழு
இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், இங்கிலாந்து இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபத்தின் மூத்த மகனுமான சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து கிளாரன்ஸ் ஹவுஸ், “கோவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான சில அறிகுறிகள் 71 வயதாகும் இளவரசர் சார்லஸுக்கு உள்ளது. மற்றப்படி அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார்,” என செய்திக் குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
71 வயதாகும் சார்லஸ் ஸ்விட்சர்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.