• Download mobile app
07 Dec 2025, SundayEdition - 3588
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோசமான கவனிப்பால் மலைப்பாம்பை டிப்ஸாக கொடுத்த வாடிக்கையாளர்.

March 24, 2016 http://www.breitbart.com

ஹிரோஷி மோடோஹஷி என்பவர் லாஸ் எஞ்சலில் உள்ள ஒரு ஹோட்டலில் 200 டாலருக்கு உணவு ஆடர் செய்துவிட்டு உணவருந்த சென்றுள்ளார். அப்போது அவர் வைத்ததிருந்த ஒரு குட்டி மலைப்பாம்பை எடுத்து அருகில் இருந்த மற்ற வாடிக்கையாளர்களிடம் காண்பித்துள்ளார்.

இதைக் கவனித்த கடை ஊழியர்கள் அவரை உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் நடத்தை சரியில்லை எனக் கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சிறிதுநேரம் கழித்து வந்த அவர் தன்னுடன் கொண்டுவந்திருந்த 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பை எடுத்து ஹோட்டலில் விட்டுவிட்டு கூலாக திரும்பிச்சென்றார். பின்னர் ஹோட்டல் நிர்வாகத்தினர் விலங்குகள் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் வந்து மலைப்பாம்பை மீட்டதோடு, மோடோஹஷியை கைது செய்தனர். பின்னர் அவரிடம் செல்லமாக வளர்க்கக்கூடிய பாம்பை வளர்க்க அனுமதி பெற்றுள்ளாரா எனச் சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இது போல அனுமதியின்றி பல விலங்குகளை விற்றதற்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க