March 23, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 39வது வார்டில் உள்ளது பொரிக்கடைச் சந்து பகுதி. இந்த பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலனோர் தாழ்த்தப்பட்ட மக்களாக உள்ளனர்.சாக்கடை பிரச்சனை இப்பகுதி மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. தற்போது வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தங்களை தற்காத்து கொள்ள நிலைமையறிந்த மக்கள் நாம் பகுதியை நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும் என முடிவெடுத்து களத்தில் இறங்கி கலக்கியுள்ளனர்.இது விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அவர்கள் ஆண்கள், பெண்கள் என்று பாராமல் அனைவரும் களத்தில் இறங்கி அப்பகுதியை தூய்மை செய்துள்ளனர். இப்பகுதி மக்களின் செயல் அனைத்து பகுதி மக்களும் ஒரு முன்னுதாரனமாகவே பார்க்கப்படுகிறது.