• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எங்கள் ஒவ்வொரு சிறிய முயற்சியும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோடி

March 21, 2020

பொதுமக்கள் அவசியமில்லாத பயணங்களை தவிர்க்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 400ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தநிலையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். 22-ந் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தொலைக் காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த பதிவில்

ஒருபோதும் மறக்க வேண்டாம்-முன்னெச்சரிக்கைகள் குறித்து பீதி அடைய வேண்டாம். சுய ஊரடங்கான நாளை 22-ம் தேதி தேவையற்ற பயணங்கள் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவாது. வீட்டிலிருப்பது மட்டும் முக்கியமல்ல, வெளியூர் செல்லாமல் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே இருப்பதும் முக்கியம். மருத்துவர்கள் அறிவுரையின்படி தனிமைப்படுத்திக்கொள்வது குடும்பத்தையும், நண்பர்களையும் பாதுகாக்கும்.

கொரோனா காரணமாக தனிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டோர் அதனை கடைபிடித்தல் முக்கியமானது. மருத்துவர்கள், அதிகாரிகளின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டிய நேரம் இது. இந்த காலங்களில், எங்கள் ஒவ்வொரு சிறிய முயற்சியும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க