March 21, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஏற்கனவே மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ஆம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி மார்ச் 27ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், 11, 12 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.