March 21, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நாளை சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோடியின் இந்த அறிவிப்பால் நாளை நள்ளிரவு 12 மணிமுதல் ஞாயிறு இரவு 10 மணிவரை பயணிகள் ரயில்கள் ஓடாது என்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறு அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் என்றும் பிடிஐ அறிவித்திருந்தது. அதைப்போல் தமிழகத்தில் ஞாயிறன்று பேருந்துகள் ஓடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.