March 20, 2020
தண்டோரா குழு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 223 பேரில் 191 இந்தியர்கள், 32 வெளிநாட்டவர்கள் ஆவர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 52 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 28 பேர், உத்தரப் பிரதேசத்தில் 23 பேர், ஹரியானாவில் 17 பேர், கர்நாடகாவில் 15 பேர், டெல்லியில் 17 பேர், ஜம்மு – காஷ்மீரில் 4 பேர், லடாக்கில் 10 பேர்,தெலங்கானாவில் 17 பேர், பஞ்சாப்பில் 2 பேர், ராஜஸ்தானில் 17 பேர், தமிழ்நாட்டில் 3 பேர்,ஆந்திராவில் 2 பேர்,குஜராத்தில் 5 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது
தொடர் கண்காணிப்பில் 6,700 பேர் உள்ளனர், இந்தியாவில் பலியான 4 பேரும் 64 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.