• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நிர்பயா வழக்கு; தூக்குத் தண்டனை நிறைவேற்றம் – நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது – பிரதமர் மோடி டுவீட்

March 20, 2020

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (27), அக்‌ஷய் குமார் (33) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை டெல்லி உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

எனினும், தண்டனையை குறைக்க சொல்லி அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது. குற்றவாளிகளின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் நிராகரிக்கப்பட்டதையடுத்து, இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

குற்றவாளிகள் தூக்கிலிடபட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

பெண்களின் கவுரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த தண்டனை மிக முக்கியமானது . நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது. “நமது சக்தி ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது. பெண்கள் வலுவூட்டலில் கவனம் செலுத்தும் ஒரு தேசத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும், அங்கு சமத்துவம் மற்றும் வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது,” என்று கூறி உள்ளார்.

மேலும் படிக்க