• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஒப்பணக்கார வீதி யில் உள்ள பிரபல ஜவுளி கடைகள் மூடப்பட்டன

March 20, 2020

கொரானா வைரஸ் எதிரொலியாக பெரிய ஜவுளி கடைகள் நகைக் கடைகளையும் இன்று முதல் 31ஆம் தேதி வரை மூடுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரானா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள் தியேட்டர்கள் மூடப்படும் என்று சமீபத்தில் முதலமைச்சர் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தற்போது அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கை குறித்து அவர் வெளியிட்டு இருக்கிறார்.தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் ஏற்கனவே வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது மக்கள் அதிகம் செல்லக் கூடிய ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி கொண்ட பெரிய ஜவுளிக் கடைகள், பெரிய நகைக் கடைகள், பல்வகை பொருட்கள் விற்பனை செய்யும் மிகப்பெரிய கடைகள் போன்றவற்றில் அதிக மக்கள் கூட்டம் கூடுவதால் இன்று முதல் மூடப்படும் எனினும் நகைக் கடை போன்றவற்றில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆர்டரின் படி பொருட்களை பெற்று செல்ல மட்டும் ஒரு தனி வழி பயன்படுத்தலாம். பொருட்கள் விற்கும் கடைகள் பல்பொருள் அங்காடிகள் காய்கறிகள் மருந்துகள் மற்றும் உணவுகள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும். அதனடிப்படையில் கோவை ஒப்பணக்கார வீதி யில் உள்ள பிரபல ஜவுளி கடைகள் நகைக் கடைகள் மூடப்பட்டன இதனால் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

மேலும் படிக்க