March 19, 2020
தண்டோரா குழு
மார்ச் 22-ஆம் தேதி ஞாயிறு அன்று யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கோரோனோ வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை இந்த வைரசினால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கோரோனோ வைரஸ்
பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசி வருகிறார்.
பிரதமர் மோடி பேசுகையில்,
திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது.
கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது.
மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது.130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
மார்ச் 22ம் தேதி மக்களுக்காக ஊரடங்கு உத்தரவை பின்பற்றவேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியே வர வேண்டாம். மார்ச் 22ம் தேதி அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலகப் போரின் போது கூட நாடுகள் இந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை.
2 மாத காலமாக 130 கோடி இந்தியர்களும் கொரோனா குறித்தே பேசுகின்றனர்.ஒவ்வொரு இந்தியனும் கொரோனா வைரஸ் குறித்த சரியான தகவல்களை பெறுவது அவசியம்.
கொரோனா பரவுவதை தடுத்து இந்தியா எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை நிரூபிப்போம். கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று மற்றவர்கள் நன்றி சொல்லுங்கள் என கூறியுள்ளார்.