March 19, 2020
தண்டோரா குழு
மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் பீடம் மற்றும் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பான எஸ்ஆர்எம் யூ இணைந்து கோவை ரயில் நிலையத்தில் கொரோனோ வைரஸை தடுக்கும் பார்முலா 2 நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சித்தர் சிவ சண்முகசுந்தரம் பாபுஜி சுவாமிகள் தலைமை வகித்தார். தொடர்ந்து ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.
இது குறித்து சித்தர் சிவ சண்முகசுந்தரம் பாபுஜி சாமிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது,
உலகெங்கும் பயமுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.நமது உடம்பில் போதுமான அளவு எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த விதமான விஷ காய்ச்சலும் நம்மை அண்டாது இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக கோவை ரயில் நிலையத்தில் இன்று பத்தாயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறோம். தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு இந்த மாதத்திற்குள் நிலவேம்பு கசாயம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி நடப்பதை அறிந்த ரயில் பயணிகள் ஏராளமானோர் நீலவேம்பு கசாயத்தை வாங்கி பருகி சென்றனர்.