• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரத்தினம் கல்வி குழுமம் சார்பில் இணைய வழி மூலம் கற்றல் பயிற்சி

March 18, 2020 தண்டோரா குழு

தமிழக அரசு கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க கல்லூரி மாணவர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை என அறிவித்துள்ளது. எனவே இன்று இரத்தினம் கல்வி குழுமம் சார்பாக இணைய வழி மூலம் கற்றல் பயிற்சியானது ஆசிரியர்களுக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 175 கும் மேற்பட்ட ரத்தினம் கல்வி குழும பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் முதல்வர் முனைவர் ஆர் முரளிதரன் வழங்கினார்.

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வழக்கமான வகுப்பில் கலந்து கொள்ளாமல் தங்கள் வீட்டில் இருந்து கல்வி கற்க மாணவர்களுக்கு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.MS TEAMS (Microsoft Teams) என்கிற செயலியின் மூலம் மாணவர்களை தொடர்புகொள்வதற்கும், முக்கியமான சுற்றறிக்கைகளை அனுப்பவும்,இணைய வழி கற்பித்தல்,இணைய வழி தேர்வுகள் போன்றவை ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகின்றது.எனவே இரத்தினம் கல்லூரி மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்து கல்வி கற்பதற்கான ஒரு சிறந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் (Microsoft Teams) மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் இனைய வழி மூலம் கேட்க முடியும். மேலும், மாணவர்கள் புரிந்துகொள்ளும் அளவை சோதிக்க மாணவர்களுக்கு பணி(Assignment) மற்றும் வினாடி வினாவும் (Quiz Test) நடத்தப்படுகிறது. ஓவ்வொரு பாடத்தின் சம்பந்தப்பட்ட தலைப்பில் ஆசிரியர்கள் வீடியோவை பதிவிட முடியும். இந்த செயல்முறையின் மூலம் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கற்றுக் கொள்ளவும், தெளிவுபடுத்தவும் முடியும் மேலும் இது மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற இந்த முயற்சி ஊக்குவிக்கிறது. இனைய வழி கற்பித்தல் மூலம் மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் அவர்களுக்கு கல்வி கற்பிக்க இரத்தினம் கல்லூரி திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தீவிரமாக பரவினால் தற்போதைய நிலைமை மாறக்கூடும். எந்தவொரு தொழில் வல்லுனரும் வீட்டிலிருந்து வேலை செய்துகொள்ளலாம். Http://aicraise.com/againstcorona என்ற இந்த இணைப்பு மூலம் தொழில் வல்லுநர்களை இணைப்பதற்கு ரத்தினம் கல்வி குழுமம் மிகவும் ஆர்வமாக உள்ளது.

மேலும் படிக்க