• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வைத்து கல்லூரி மாணவியை மிரட்டியவர் கைது

March 18, 2020

நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக கூறி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த எலக்ட்ரீசியன் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை கணபதி நல்லாம்பாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரசாத் இவர் எலக்ட்ரீசியன் இவருக்கு பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது.

இந்நிலையில் இந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இருவரும் நெருக்கமாக இருப்பது போன்று பிரசாத் போட்டோ எடுத்ததாக தெரிகிறது. இதற்கிடையே பிரசாத் நடவடிக்கை பிடிக்காததால் அவரை விட்டு மாணவி விலகினார். மாணவிக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெற்று வந்தது.

இதனை அறிந்த பிரசாத் நீ என்னை திருமணம் செய்து கொள்ள வில்லை எனில் நாம் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து பீளமேடு போலீசில் மாணவி புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசாதத்தை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க