• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோழிக்கறி மூலம் கொரோனா பரவுவதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு

March 17, 2020

கோழிக்கறி மூலம் கொரோனா பரவுவதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு தீவிரமாக சுகாதார பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கோழி மாமிசம் மற்றும் அது சம்பந்தமான பொருட்களை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரப்பட்டு வருகின்றன. இது உண்மையா? அல்லது வதந்தியா? என்று தெரியாமல் பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளதால், பலர் சிக்கன் மற்றும் முட்டை போன்ற பொருட்களை வாங்குவதை தவித்தனர்.

இந்த வதந்தியால் இறைச்சி மற்றும் முட்டை விற்பனையாளர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் முட்டைக்கு பெயர் போன நாமக்கல் மாவட்டத்தின் கோடி கணக்கில் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒருபக்கம் விவசாயிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் கோழிகளின் தீவனமான மக்காச் சோளத்தின் விலை கடும் சரிந்துள்ளது. சமூக ஊடகங்களில் பரபப்படும் வதந்தியால், பலரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இதுக்குறித்து இன்று பேசிய தமிழ்நாடு முட்டைகோழி பண்ணையாளர்கள் சம்மேளனத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணி,
சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வதந்தி காரணமாக, முட்டை மற்றும் கறிக்கோழி விலைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. தவறான கருத்துக்களை பரப்பியவர்களை அரசு கைது செய்திருப்பது பெரும் மகிச்சி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி என்றார். மேலும் சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க