March 16, 2020
தண்டோரா குழு
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் வந்திறங்கிய 9 ஆண்கள், 5 பெண்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பூவிருந்தவல்லி அரசு பொது சுகாதார நிலையத்தில் 14 பேரும் 24 மணி நேரத்துக்கு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.