March 15, 2020
தண்டோரா குழு
மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டும் என நடிகர் விஜய் பேசியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் நடிகர் பேசுகையில்,
நண்பர் அஜித் மாதிரி கோட் ஷூட் போட்டு வந்திருக்கிறேன்.வாழ்க்கை நதி மாதிரி நம்மை வணங்குவார்கள், வரவேற்பார்கள், கற்களையும் எறிவார்கள். இளைய தளபதியாக இருக்கும் போது ரெய்டு இல்லாமல் வாழ்க்கை அமைதியாக இருந்தது.நம்மை பிடிக்காதவங்க நம் மீது கல் எறிவார்கள்- சிரிப்பால் அவர்களை கொல்ல வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும் என்றால் சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டும்.என்ன நடந்தாலும் நமது வாழ்க்கையில் கடமையை செய்துகொண்டே தொடர்ந்து பயணிக்க வேண்டும். ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று கேட்பேன்.மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டும்.சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.