• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது

March 14, 2020

கோவை வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபவர்களை போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தி செல்வதாக போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய கிடைத்த தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த இரண்டு நாட்களாக கோவை வழியாக செல்லும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தினர். அதில் 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன்,பிரபாகரன்,பாலமுருகன் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூவரும் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி ரயில்கள் மூலம் கடத்தி வந்து கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மூவரையும் கைது செய்த போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க