• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பக்கவாத நோய்க்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் திறப்பு

March 13, 2020

கோவையில் புதிதாக துவங்கப்பட்ட பக்கவாத நோய்க்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் கோவையின் மருத்துவசேவையில் மேலும் ஒரு மைல்கல் என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தற்போது பல்துறை வசதிகள் வசதிகள் கொண்ட மருத்துவமனைகளில் பக்கவாத சிகிச்சை என்பது சவாலாகவே உள்ளது. இந்நிலையில் பக்கவாத பாதிப்பு ஏற்படும் போது மூன்று மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், சிகிச்சைக்குத் தேவையான சி.டி. ஸ்கேன் வசதி உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் கடந்த 2017 ஆண்டு கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் துவங்கப்பட்டது.

இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக பக்கவாதத்திற்கென சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்யேக ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் மருத்துவமனை வளாகத்தில் துவங்கப்பட்டது.முன்னதாக இதன் துவக்க விழாவில் கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் ஜடாவத் கலந்து மையத்தை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்திலேயே மருத்துவதுறையில் பல்வேறு நவீன சிகிச்சை வசதிகள் கொண்ட மாவட்டமாக கோவை உள்ள நிலையில் தற்போது துவங்கியுள்ள இந்த மையம் கோவையில் உள்ள மருத்துவ வசதியில் மேலும் ஒரு மைல் கல் என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் தலைவர். மருத்துவர் நல்லா ஜி.பழனிசாமி பேசுகையில்,

பக்கவாத பாதிப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த பிரத்யேக மையம் துவங்கப்பட்டுள்ளதாகவும்,இதில் 25 உறுப்பினர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாகவும்,குறிப்பாக இந்த மையத்தில்,பக்கவாதத்திற்கு என மருத்துவம்,அறுவை சிகிச்சை,நுண்துளை ,மற்றும் நல்ல பயிற்சி பெற்ற நரம்பியல் சிகிச்சை , அவசர சிகிச்சை நிபுணர்கள் என ஒருங்கிணைந்த நவீன ஒருங்கிணைந்த பக்கவாத சிகிச்சை மையமாக செயல்படும் என அவர் தெரிவித்தார்.

விழாவில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் அருண் N பழனிசாமி மற்றும் மருத்துவர்கள் மேத்யூ செரியன்,பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க