• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மது – நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்ற விழிப்புணர்வு வாசகம் மாற்றம்

March 13, 2020

மது பாட்டில்களில் இடம் பெற்றிருக்கும் ’மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு’ வாசகம் மாற்றப்படுகிறது.

சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அத்துறை அமைச்சசர் தங்கமணி மதுபானக் கடைகளைக் குறைப்பது குறித்து அத்துறை அமைச்சசர் தங்கமணி விளக்கினார். மேலும், அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுபான பாட்டில்களில் இடம் பெற்றிருக்கும் எச்சரிக்கை வாசகமான ‘மது – நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று சொற்றொடருக்குப் பதிலாக ‘மது அருந்துதல் உடல்நலத்துக்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் – மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்று சொற்றொடர் பயன்படுத்தப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க