• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை போஸ்ட் பத்திரிகையின் தலைமை செய்தியாசிரியருக்கு ‘ சிங்கப் பெண்ணே விருது’

March 9, 2020 தண்டோரா குழு

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, கோவை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில், பணிக்கு செல்லும் பெண்களை கவுரவப் படுத்தும் விதமாக, கடந்த 2018ம் ஆண்டு முதல் ‘கோவை ஒண்டர் உமன் ஐகான்’ விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகின்றது. தொழில் துறை, சுய உதவிக்குழுக்கள், விளையாட்டு, கலை, ஊடகம், புகைப்படக்கலை, டிரைவிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த பெண்களை, தேர்வு செய்து ‘கோவை ஒண்டர் உமன் ஐகான்’,’கோவை ஒண்டர் உமன் 2020′ என, இரு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு,கோவை ஒண்டர் உமன் அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா புரோசோன் மாலில் நடந்தது.இதில்,பத்திரிகை துறையில் பல ஆண்டுகளாக தனக்கென்று தனி முத்திரை பதித்து வரும் கோவை போஸ்ட் பத்திரிகையின் தலைமை செய்தியாசிரியர் வித்யஸ்ரீ தர்மராஜிற்கு ‘கோவை ஒண்டர் உமன் ஐகான் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை அவருக்கு ராவ் மருத்துவமனையின் இயக்குநர் தாமோதர் ராவ் வழங்கி கெளரவித்தார்.

அதைபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் கோவையில் நடைபெற்ற விழாவில் கோவை போஸ்ட் பத்திரிகையின் தலைமை செய்தியாசிரியர் வித்யஸ்ரீ தர்ம ராஜின் சாதனைகளை அடையாளப்படுத்தும் விதமாக அவருக்கு சிங்கப்பெண்னே விருதினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கி கெளரவித்தார்.மேலும், இன்னர் வீல் கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் கேம் செஞ்ஜர் இன் மீடியா விருதும் கோவை போஸ்ட் பத்திரிகையின் தலைமை செய்தியாசிரியர் வித்யஸ்ரீ தர்ம ராஜிற்கு வழங்கபட்டது.இதற்கான ஏற்பாடுகளை டிஸ்சோனி நிகழ்வு மேலாண்மை நிறுவனம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கோவை போஸ்ட் பத்திரிகையின் தலைமை செய்தியாசிரியர் வித்யஸ்ரீ தர்மராஜ் கூறுகையில்,

மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருதுகள் என்னை மென்மேலும் இந்த சமூகத்தில் உயர உத்வேகப்படுத்தும் என நம்புகிறேன் என்றார்.

மேலும் படிக்க