• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கழிவுகள் உருவாகும் இடத்திலேயே பிரித்து அனுப்பும் திட்டம் துவக்கம்

March 9, 2020 தண்டோரா குழு

கழிவுகள் உருவாகும் இடத்திலேயே பிரித்து அனுப்பும் திட்டத்தை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் துவக்கிவைத்தார்.

கோவை அவினாசி சாலையில் புதியதாக அமைக்கபட்டுள்ள அரிமா வேக்பீல்டில் கழிவுகள் உருவாகும் இடத்திலேயே பிரித்து அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கு. ராஜாமணி முன்னிலையில், கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் துவக்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்,

இந்த புதிய குடியிருப்பிற்கு வந்துள்ளவர்கள் தங்களது பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க ஒவ்வொரு வீட்டில் இருக்கும் குப்பைகளை தரம்பிரித்து கொடுத்தல் மூலம் தங்களது பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதுடன், நமது நகரத்தையும் தூய்மையாக வைத்திருக்க உதவிகரமாக இருக்கும். புதிய குடியிருப்பு வாசிகள் தற்போது இருந்தே தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொண்டு மாநகரம் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கு. ராஜாமணி பேசும் போது,

கோவை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சனைகளை அறிந்து பிரச்சனைகளைக் களைய கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆகியவற்றோடு கட்டுமானத் துறையில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட்டில் துறையில் உள்ளவர்களும் ஒத்துழைப்புத் தரவேண்டும். சுற்றுச்சூழல், இயற்கை சூழல் ஆகியவற்றை பேணி பாதுகாக்கவும், மாசு இல்லாத கோவை நகரத்தை உருவாக்கிடவும் பொதுமக்கள் உள்ளிட்ட எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

அரிமா கன்ஸ்ட்ரக்சன் மற்றும் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அர்விந்த் குமார் கூறுகையில்,

சுற்றுச் சூழலுக்கும், சமுதாயத்திற்கும் உண்மையாகவும், நிலையான வாழ்க்கைக்கு ஏற்ற வசதிகளுடனும் அரிமா நிறுவனம் இவற்றை உருவாக்கியுள்ளன. கழிவு மேலாண்மைக்காக டிடபிள்யுஎம்எஸ் என்ற அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன் படி பிரித்துக் கொடுத்த கழிவுகளை இந்நிறுவனம் மறுசுழற்சிக்கு எடுத்துச்செல்லும். கழிவுகள் உருவாகும் இடத்திலேயே பிரித்து அனுப்பும் திட்டத்தை முதல் நாள் முதல் செயல்படுத்தும் முதல் அடுக்குமாடி குடியிருப்பாக அரிமா வேக்பீல்டு திகழ்கிறது. மழை நீரை சேகரித்து, பூமிக்குள் செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது என்றார்.

மேலும் படிக்க