• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவு ஏற்றி வந்த லாரியை கோவையில் சிறை பிடித்த பொதுமக்கள்

March 9, 2020

கோவை நவகரை அருகே கேரளாவில் இருந்து மருத்துவ கழிவு ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தமிழக கேரள எல்லபகுதியான கோவை ஊரக பகுதியான நவகரை, மதுக்கரை ஆகிய இடங்களில் மர்ம நபர்கள் கேரள மருத்து கழிவுகளை கொட்டி செல்வது வழக்கமாக நடைபெறும் சம்பவமாக மாறியுள்ளது. அவ்வப்போது இது போல கழிவுகளை கொட்ட வரும் வாகனங்களை அப்பகுதி மக்களே பிடிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. அது போல் இன்றும் நவகரை அருகே கேரளாவில் இருந்து மருத்துவகழிகளை ஏற்றி வந்த லாரியை அப்பகுதி மக்களே பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

லாரி ஓட்டுனர் ஆறுச்சாமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .கொரணா வைரஸ் கேரளாவில் ஊடுருவிய நிலையில் இது போல் மருத்துவ கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க அரசு தரப்பில் குழு ஒன்றை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மேலும் படிக்க