• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பந்த் – மக்கள் சாப்பிடாமல் பாதிக்கப்படகூடாது; பிரியாணி’ விநியோகம் செய்த இஸ்லாமியர்கள்

March 7, 2020 தண்டோரா குழு

கோவை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்தனை கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கினர். இதையடுத்து மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அன்றைய தினம் இரவு சில மர்ம நபர்கள் பள்ளிவாசல் முன் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். ஆனந்தன் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியனரும், பள்ளிவாசல் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் தனித்தனியே கோவையில் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முழு அடைப்பு போரட்டத்தின் காரணமாக கோவையில் 90 சதவீத ஒட்டல்கள், பேக்கரிகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் உணவிற்காக பொதுமக்கள் அலையும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டம் காரணமாக யாரும் உணவு சாப்பிடாமல் இருக்க கூடாது என்பதற்காக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் பொது மக்களுக்கு “வெஜ் பிரியாணி” இலவசமாக வழங்கப்பட்டது.பொது மக்கள் அதிகம் கூடும் கோவை அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், காந்திபுரம் , உக்கடம் பேருந்து நிலையங்களில் “வெஜ் பிரியாணி ” வழங்கப்பட்டது. உணவகங்கள், பேக்கரிகள் மூடப்பட்டு இருந்ததால் சாப்பாடு கிடைக்காமல் இருந்த ஏழை,எளிய மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.மொத்தம் 5000 பேருக்கு உணவு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கடையடைப்பு போராட்டம் நடத்தினாலும் , மக்கள் சாப்பிடாமல் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக பொது இடங்களில் “வெஜ்பிரியாணி “உணவு வழங்கியது கோவை மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க