• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வெகுவிமர்சையாக நடைபெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம்

March 4, 2020 தண்டோரா குழு

கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவையின் காவல் தெய்வமாக போற்றபடுகிறது. பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலின் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர்நிலை திடலில் துவங்கி ராஜவீதி, ஒப்பணகார வீதி,ஐந்து முக்கு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தார். கடந்த 13ம் தேதி பூச்சாட்டுடன் விழா தொடங்கி கொடியேற்றம், திருவிளக்கு வழிபாடு,திருக்கல்யாணத்திற்கு பிறகு இன்று நடைபெற்ற தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு கோவை ராஜவீதி,பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க