• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒய்வு பெற்ற ஆசிரியரை கட்டிப்போட்டு கொள்ளை

March 4, 2020

கோவையில் ஒய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு முகமூடி திருடர்கள் 60 சவரண் நகை கொள்ளையடிக்கப் பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சுங்கம் பாரி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரான்ஸ் ரொசாரியோ. 60 வயதான ஒய்வு பெற்ற ஆசிரியரான இவர், தனது மனைவி எலிசபெத் மேரியுடன் வசித்து வருகிறார். இவரது மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் 4 பேர் முகமூடி மற்றும் கையுறை அணிந்து வந்து, முன்பக்க கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்துள்ளனர். தரைதளத்தில் தூங்கிக்கொண்டிருந்த பிரான்ஸ் ரொசாரியோ மற்றும் எலிசபெத் மேரி இருவரையும் கட்டி போட்டு விட்டு, பீரோவில் இருந்த 60 சவரண் நகை மற்றும் ஒரு இலட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பிரான்ஸ் ரொசாரியோ அளித்த புகாரின் பேரில், இராமநாதபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க