• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊட்டி கேன்டீன் உரிமையாளர் கொலை வழக்கு – 4 பேருக்கு ஆயுள் தண்டனை

March 3, 2020

ஊட்டி கேன்டீன் உரிமையாளர் கொலை வழக்கில் 4 பேருக்கு கோவை கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது அவர்களை போலீசார் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஊட்டி கேன்டீன் உரிமையாளர் கொலை வழக்கில் வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஊட்டி கால்நடை மருத்துவமனை சாலை சேர்ந்தவர் சேகர் இவர் ஊட்டி எஸ்பிஐ வங்கி வளாகத்தில் கேன்டீன் நடத்தி வந்தார். இந்த நிலையில் சேகருக்கும்,அதே பகுதியைச் சேர்ந்த வக்கீல் ஸ்ரீதர் என்கின்ற பாபு என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2009 அன்று ஸ்ரீதர் ஐந்து பேர்கொண்ட கூலிப்படையை ஏவி கேண்டீன் சேகரை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து ஊட்டி டவுன் சென்ட்ரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் ஸ்ரீதர் என்கின்ற பாபு, முரளி, கார்த்திகேயன், பிரபாகரன், அலெக்ஸ் ,ஆகிய 6 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வழக்கு கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது.நேற்று இவ்வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வக்கீல் ஸ்ரீதர் என்கின்ற பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை கார்த்திகேயன் பிரபாகரன் ஆகிய இருவருக்கும் 3ஆயுள் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் அலெக்ஸ் க்கு 2 ஆயில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.இவ்வழக்கில் முரளி என்பவர் விடுதலை செய்யப்பட்டார் சிபு என்பவர் தலைமறைவாக உள்ளார்.

மேலும் படிக்க