• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போதை பொருள் வைத்திருந்தவர் கைது !

March 3, 2020

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது இர்பான் இவர் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று மாலை அன்னூர் செல்வதற்காக கருமத்தம்பட்டி நால் ரோடு சந்திப்பில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகமான வகையில் நின்று கொண்டிருந்த இர்பானை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அதில் போதை மருந்துகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர்.
அங்கு போதை மருந்து மற்றும் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர் இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அந்த அறையில் தங்கி இருந்த நண்பர் ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்துகள் விற்பனை செய்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார் வந்த நிலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் தங்களது கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளனர் இதன் விளைவாகவே தொடர்ச்சியாக போதை மருந்துவிற்கும் கும்பல் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க