• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு ஆதரவாக பா.ஜ.கவினர் தொடர் போராட்டம்

March 2, 2020 தண்டோரா குழு

குடியுரிமை சட்ட திருத்ததிற்கு ஆதரவாக பா.ஜ.கவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில்தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக கோவை ஆத்துப்பாலத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஷாகின் பாக் எனப்படும் தொடர் காத்திருப்பு போராட்டம் ஏழாவது நாள் நள்ளிரவிலும் தொடர்ந்து வருகிறது.இந்த போராடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமையை சட்டதிற்க்கு ஆதரவு தெரிவித்து காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் அருகில் பா.ஜ.க,இந்து முன்னணி,பரிவார் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் பேசுகையில்,

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக கோவை மாநகரில் தொடர் போராட்டம் நடத்துவதற்கு இந்து இயக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் குடியுரிமை சட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை என கூறி உள்ள போதும், தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் போராட்டத்தை கண்டித்து இந்த போராட்டம் நடத்தபடுவதாக தெரிவித்தார். இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்பாட்டத்தில் மற்றவர்கள் ஈடுபடுவது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல் எனவும் முதல்வர் மற்றும் பிரதமரை தரக்குறைவாக பேசி தரம் தாழ்ந்து போராட்டம் நடந்து வருவதாகவும் இச்செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யப்பட வேண்டும் என்றார்.சட்டம் ஒழுங்கு பாதுக்காக்கப்பட வேண்டும் என்றால், மத நல்லிணக்கம் தொடர வேண்டும் எனில் தமிழக அரசும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், சி.ஏ.ஏ.விற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால், வன்முறையை தமிழக அரசே ஏற்படுத்தி தருகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க