• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு

March 2, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி கடந்த 27 ஆம் தேதியும், குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன், கடந்த 28ஆம் தேதியும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த 2 தொகுதிகளும் காலியாக இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு சட்டமன்ற செயலாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு சத்யபிரதா சாஹூ எழுதியுள்ள கடிதத்தில், திருவெற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும்,தேர்தல் ஆணைய விதிப்படி, சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பின்னர் அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க