• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக பாஜக பேரணி

February 28, 2020

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் பேரணி நடைபெற்றது.பாதுகாப்புப் பணியில் 1200 போலீசார் ஈடுபட்டனர்.

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் பேரணி நடைபெற்றது.பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியானதுசெஞ்சிலுவை சங்கத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இந்த பேரணி நடைபெற்றது.

இந்நிலையில், பாதுகாப்புப் பணிக்காக கோவை நகரில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேரணி துவங்கும் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒரு பிரிவான ஆர்.ஏ.எப் எனப்படும் கலவர தடுப்பு படை பிரிவு போலீசாரும், கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம் போன்றவையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். இப்பேரணியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க