• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல் முறையாக உடல் உறுப்பு தானம் மூலம் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை – கோவை அரசு மருத்துவமனை சாதனை !

February 27, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மற்றொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக உடல் உறுப்பு தானம் பெறப்பட்டது. இந்த நிலையில், தானமாக சிறுநீரகத்தை வெற்றிகராம மற்றொருவருக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள். நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி என்பவரது மகன் சிவ பெருமாள் (35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி சிவ பெருமாள் தனது வீட்டின் அருகில் உள்ள சமுதாய கூட்டத்தின் மேற்கூரையில் நின்றபடி கட்டுமானப்பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், சிவ பெருமாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க சிவ பெருமாளின் குடும்பத்தினர் முன்வரவே கடந்த 5ம் தேதி முதன் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் பெறப்பட்டது. பல தனியார் மருத்துவமனைகள் உடல் உறுப்பு தானம் பெற்று வந்தாலும், அரசு மருத்துவமனையில் முதன் முறையாக உடல் உறுப்பு தானம் பெறப்படுவதால், மருத்துவர்கள் ஒருவித பதட்டத்துட்டன் இருந்தனர். இருந்த போதிலும், எவ்வித பிரச்சனையும் இன்றி வெற்றிகரமாக உடல் உறுப்பு தானம் பெற்று சாதனை படைத்தனர்.இந்த சூழலில், மேலும், ஒரு சாதனையாக எவ்வித இடையூறும் இல்லாமல் தானமாக பெறப்பட்ட சிறுநீரகத்தை முதல் முறையாக மற்றொருவருக்கு பொருத்தியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில்,

“மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 34) என்பவர் கடந்த மே மாதம் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் சிவபெருமானின் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு அதனை அருண்குமார் வெற்றிகரமாக பொருத்தியுள்ளோம். கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வந்தபோதிலும் முதன்முறையாக தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மற்றொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ கண்காணிப்பாளர் சடகோபன் ஒருங்கிணைப்பில் மருத்துவர்கள் பிரபாகர், காந்தி மோகன், தினகரன் பாபு, மோகன், ரமேஷ், சாந்தா அருள்மொழி, ஜெயசங்கர் நாராயணன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இடையூறுகளை களைந்து சிறப்பாக செயல்பட்டு இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

உடல் உறுப்பு தானங்கள் அதிக அளவில் புறப்படும் பொழுது பல குடும்பங்களுக்கு மீண்டும் வாழ்க்கை கிடைக்கிறது இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது என்று கூறினார்.

மேலும் படிக்க