• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற திருடனுக்கு தர்ம அடி

February 26, 2020

கோவை போத்தனூர் அடுத்த அண்ணாபுரத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை, போத்தனூர் அடுத்த அண்ணாபுரத்தில் அருள் மிகு அக்னி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலின் உள்ளே இருந்து வெளியே குத்தித்துள்ளான். இதைப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பார்க்கவே, அவனை பிடித்து விசாரித்ததில், கோவில் உண்டியலை உடைத்து திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் திருடனுக்கு தர்ம அடி கொடுத்து மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். தனது பெயர் ஆசாத் என்றும், கோவையை சேர்ந்தவன் என்றும், கோவில் உண்டியலை திருட வந்ததாகவும் பொதுமக்களிடத்தில் அவன் கூறியுள்ளான். அதிகாலை 4 மணிக்கு நடந்த இச்சம்பவத்தை போத்தனூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தும் 3 மணி நேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். தொடர்ந்து திருட வந்த நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு சென்றனர். திருட வந்த இவன் எக்ஸ்சல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளான். அந்த இருசக்கர வாகனமும் திருடப்பட்டதா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க