• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிப்ரவரி 24-ஆம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிப்பு !

February 22, 2020 தண்டோரா குழு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா பெண் குழந்தைகளுக்கு ஆற்றிய சேவையை நினைவு கூரும் வகையில் அவரது பிறந்த நாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

பிப்ரவரி 24-ஆம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், மனிதச் சங்கிலிகள், பேரணிகள், கருத்தரங்கங்கள், வீதி நாடகங்கள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க