நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் மீண்டும் உருவாகும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அஜித் டூப் இல்லாமல் பைக் ஓட்டும் ரிஸ்க்கான காட்சியில் நடித்தபோது எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தாலும் காயம் பயப்படும்படி இல்லாததால் சென்னையில் நடந்த படப்பிடிப்பு முழுவதையும் அஜித் முடித்து கொடுத்துள்ளார்.
எனினும் தற்போது அஜித் ஓய்வில் இருந்து வருகிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஆரம்பமாகவுள்ளது. அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு