• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிச்சையெடுக்கும் ஸ்வீடன் தொழிலதிபர்..!

February 18, 2020 தண்டோரா குழு

ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் தொழிலதிபரான கிம். தன் மன நிம்மதிக்காக இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோவையிலுள்ள ஈஷா யோகா தியான மையத்திற்கு வந்துள்ளார். அங்கு ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்துள்ளார். ஆனாலும் மனநிம்மதி கிடைக்காததால், பொதுமக்களிடம் இரு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்து அவர்களிடம் யாசகம் கேட்டு பெற்று வருகிறார்.

கோவை ரயில் நிலையத்திற்கு வரும், பொதுமக்களுக்கு வணக்கம் வைத்து, அவர்கள் கொடுக்கும் ஐந்து, பத்து ரூபாய் பணம் பெற்று, அதில் உணவு வாங்கி உட்கொண்டு வருகிறார். இதன் மூலம் மன நிம்மதி கிடைப்பதாக, கிம் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி இவ்வாறு செய்வதன் மூலம் மனம் சாந்தி அடைகிறது என்றும் அவர் கூறுகிறார்.

வெள்ளைக்காரர் ஒருவர் பொதுமக்களிடம் பிச்சை கேட்டு சுற்றித்திரிவது கோவை மக்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க