February 15, 2020
தண்டோரா குழு
ரஜினிக்கு நிகரானவர் விஜய் இல்லை. ரஜினிக்கு நிகர் அஜித்தான். ரஜினி மலை; அஜித் தலை” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிகில் பட விவகாரம் தொடர்பாக விஜயிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், அவரது அலுவலகத்திலும் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
‘இது அ.தி.மு.க ஆட்சியின் கடைசி பட்ஜெட் அல்ல. அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சிக்கான முதல் பட்ஜெட். தமிழக அரசின் பட்ஜெட் வரி இல்லாத யாரையும் பாதிக்காத முத்தான பட்ஜெட். விஜயிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. விஜய், ரஜினிக்கு நிகரானவர் இல்லை. ரஜினிக்கு நிகர் அஜித் தான். ரஜினி மலை, அஜித் தலை’ என்று தெரிவித்தார்.