• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கெளசிகா நதி பள்ளத்தில் எரிந்த நிலையில் கால் டாக்சி டிரைவர் சடலம்

February 15, 2020

நரசிம்மநாயக்கன்பாளையம் கெளசிகா நதி பள்ளத்தில் எரிந்த நிலையில் கால் டாக்சி டிரைவர் சடலம் கொலை செய்யப்பட்டு இருப்பாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கே.எஸ்.பி பம்ப்ஸ் பஸ் நிறுத்தம் அருகே கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கெளசிகா நதி பள்ளத்தில் துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ் தலைமையில் விரைந்து வந்த போலீசார் சோதனை செய்தபோது, அந்த பள்ளத்தில் தீயில் முழுவதும் எரிந்த நிலையில் வாலிபர் சடலம் கிடந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பித்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணை செய்ததில் டூவலர் மற்றும் இறந்தவரின் செல்போன் கிடைத்தது. அதில் கும்பகோனத்தை சேர்ந்த சீத்தாராமன் என்பவரின் மகன் ஸ்ரீனிவாசன் என்ற தியாகராஜன் என்றும், தற்போது இவர் சாய்பாபாகாலனியிலுள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் அலுவலகத்திலேயே தங்கி இருந்து கால் டாக்சி ஓட்டிவருவதும், திருமணம் ஆகி மனைவியை பிரிந்து இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் வேலை செய்யும் கம்பெனிக்கு தகவல் அளித்த போலீசார் மேற்கொண்டு யாராவது கொலை செய்து இருப்பார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அருகிலுள்ள கம்பெனிகளின் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் நடந்த இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க