• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய வகை போதைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது

February 15, 2020

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து புதிய வகை போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் குறித்து போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த இருவாரங்களில் எல்.எஸ்.டி மற்றும் போதை மாத்திரை உட்பட புதிய வகை போதை பொருட்களை விற்பனை செய்த பலரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த கும்பலைச் சேர்ந்த கேரள நபர்கள் கல்லூரி மாணவர்கள் போர்வையில் மயிலேறிபாளையம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இன்று போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மயிலேரிபாளையம் பகுதியில் இருந்த கேரளாவைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த பில்ஜூலால்,
அர்ஜூன்பிரசாத் , சாரங் ஆகிய மூன்று பேரிடம் இருந்து போதை மருத்து தடவிய LSD அட்டை, methamphetamine போதை மருந்து, 1.25 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த இந்த நபர்கள் கோவையில் தங்கி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி துறையில் இருக்கும் ஊழியர்களை குறிவைத்து அவ்வப்போது பெரிய அளவில் பார்ட்டி நடத்தி வந்திருப்பதும்,இதுபோன்று பார்ட்டி நடத்தி இந்த புதிய வகை போதை பொருட்களை விநியோகம் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் சிலரை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க