• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி எம்.எஸ்.எம்.இ.,க்கு உதவப்போகிறோம் – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

February 14, 2020

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன்கள் அதிக அளவில் வழங்கி உதவ உள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் கர்ணம் சேகர் தெரிவித்துள்ளார்.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கர்ணம் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

எங்கள் வங்கி கடந்த 8 காலாண்டுகளில் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இந்த நிலையில், 2019-2020 நிதியாண்டின் காலிறுதியாண்டில் லாபம் ஈட்டும் என்று எதிர்பார்க்கிறோம்.கடந்த டிசம்பர் மாதத்துடன் முடின்ர மூன்றாவது காலாண்டில் ரூ.6,075 கோடி இழப்பாக இருந்தது. வராக்கடன் செலவினமாக ரூ.6664 கோடி இருந்தது. இதற்கு முந்தைய இதே கால அளவை ஒப்பிடுகையில் நஷ்டம் ரூ.346 கோடியாகும்.தற்போது கடந்த 4.5 ஆண்டுகளாக இருந்த நஷ்டம் சரி செய்யப்பட்டுள்ளது.தற்போது குறைவான வட்டி விகிதம் குறைந்தபட்ச முதலீடு கடன் தொகைகளில் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்து, எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ரூ.31 ஆயிரம் கோடி எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தியா முழுவதும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிளைகள் உள்ளன. அதில் 250 கிளைகள் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவே செயல்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 100 கிளைகள் உள்ளன.

கோவையில் இதுவரை 1600 கோடி கடன் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை ரூ.3 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.தற்போது கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 50 எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து, வங்கியிடம் இருந்து அவர்கள் எதிர்பாக்கும் சலுகைகள் குறித்தும் கேட்டுள்ளோம். தொழில்துறையினரின் கருத்துக்களை பரீசிலிப்போம்

மேலும் படிக்க