February 14, 2020
கோவை குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
கோவை குறிச்சி பொங்காளியம்மன் கோவில் அருகில் குளத்தில் அடையாளம் தெரியாத பென் சடலமாக மிதப்பதாக கோவை போத்தனூர் காவல் நிலையத்திற்கும், தீயனைப்பு துறைக்கும் தகவல் அளித்துள்ளார்கள். இதனையடுத்து மீட்புபணிக்கு வந்த தீயனைப்பு படை வீரர்கள் போலீசாருக்காக 2 மணி நேரத்திற்க்கும் மேலாக காத்திருந்தனர். சடலத்தை மீட்டு யாரிடம் ஒப்படைப்பது எனத் தெரியாமல் காத்திருப்பதாக தீயனைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இதனால் இன்று வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். இந்த குளத்தில் இறங்கும் வசதிக்காக படிதுறைகள் இருந்தது. சாலை அகலப்படுத்துவதற்காக மண்களை கொட்டி படிதுறைகள் மூடப்பட்டதாலும், நீர் நிறம்பியுள்ள குளத்திற்கு எந்த பாதுகாப்பு வேலியும் இல்லாததால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.