February 13, 2020
தண்டோரா குழு
குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு நாளை கோவையில் நடைபெற உள்ள பேரணி பாதுகாப்பு பணிகளுக்காக மேற்கு மண்டலம் மற்றும் மதுரை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் தேதி தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இப்படியிருக்க இந்த குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பாரதிய ஜனதா கட்சி உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் ஊர்வலங்கள் மற்றும் அஞ்சலிகள் செலுத்துவது வழக்கம். இப்படியிருக்க நாளை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு இந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலங்கள் மற்றும் மௌன அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதற்கான பாதுகாப்பு பணிகளுக்காக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த்முரளி தலைமையில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், 2 டிஐஜிக்கள், 4 துணை ஆணையர்கள், 8 மாவட்ட எஸ்.பிக்கள், மாநகர மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த போலீஸார், கமாண்டோ பிரிவு போலீஸார், அதிவிரவுப்படை போலீஸார் என மொத்தம் 5 ஆயிரம் பேர் கோவை மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் இந்த பாதுகாப்பு பணிகள் குறித்து இன்று ஏடிஜிபி ஜெயந்தி முரளி ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.