February 13, 2020
இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு கோவை ராஜவீதியில் நடந்த விநாயகர் சதுர்த்தி துவக்க விழா மேடையில், கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு சேவகச் செம்மல் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து விஜய் குறித்து விமர்சித்து வரும் அர்ஜீன் சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த விருதினை தபால் மூலம் திருப்பி அனுப்பும் போராட்டத்தை விஜய் ரசிகர்கள் மேற்கொண்டனர்.
இதனிடையே இன்று ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள தபால் நிலையத்திற்கு வந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் இந்து மக்கள் கட்சி வழங்கிய விருதினை தபால் மூலம் அனுப்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது,
கடந்த ஆண்டுகளாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் ஊடகங்களில் தொடர்ந்து நடிகர் விஜய்குறித்து இழிவாகவும், அவதூறாகவும் பேசி வருவதாகவும், இதனால் விஜயின் ரசிகர்களாகிய தாங்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும்,அதனால் இந்து மக்கள் கட்சி சார்பில் வழங்கப்பட்ட விருதினை திரும்ப அனுப்பவதாகவும் கூறினர்.