February 13, 2020
தண்டோரா குழு
கோவையில் காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தங்கதுரை (32) அதேப்பகுதியை சேர்ந்த சுப்பிரிகா (24) என்ற பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்த நிலையில், தங்கதுரையின் காதலை சுப்பிரிகா ஏற்காததால், கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி தங்கதுரை அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து சுப்பிரிகாவை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தி, சம்மதிக்காததால், கத்தியால் குத்தியதில், சுப்பிரிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தடுக்க சென்ற சுப்பிரிகாவின் தாயார் மற்றும் சகோதரரையும் கத்தியால் குத்தியதில், இருவரிம் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கில் தங்கதுரைக்கு கொலை பிரிவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், பெண்னின் தாயார் மற்றும் சகோதரரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதற்கு தலா 7 ஆண்டுகள் சிறையும், கொலை செய்யும் நோக்கத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்ததற்கு 10 ஆண்டும் ஏக காலத்தில் அனுபவிக்கவும், ரூ.41 ஆயிரம் அபராதமும் விதித்து கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.